Saved in:
| Main Author: | |

| Format: | Recurso digital |
| Language: | |
| Published: |
Zenodo
2026

| Online Access: | https://doi.org/10.5281/zenodo.18205469 |
| Tags: |
Add Tag
No Tags, Be the first to tag this record!

Table of Contents:

தமிழ் இலக்கிய வரலாற்றில் நீண்ட வாசிப்பு மரபைப் பெற்றுள்ள நூல்களில் புறநானூறும் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தின் அடையாளத்தைச் சுமந்து நிற்கும் புறநானூறு சங்க இலக்கியத்தில் முதன்மையான பங்கு வகிக்கின்றது. சங்க இலக்கியக்காலம் என்பது பொற்காலம். சங்க பாடல்களை எல்லாம் பல புலவர்கள் பல்வேறு நிலையில் பாடியுள்ளனர். அவற்றுள் எட்டுத்தொகை நூல்களை,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று

இத்திறத்த எட்டுத்தொகை எனும் வெண்பா இயம்புகின்றது. இந்நூல்களில் ஒன்று புறநானூறு. இப்புறப் பாடல்கள் பண்டைத் தமிழ் அரசர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள் பற்றிய செய்திகளையும், போர்த்திறங்களையும் எடுத்து இயம்புகின்றன. மேலும், சங்க காலத்திலேயே பெண்பாற் புலவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், தலைமைப் பண்பு மிக்கவர்களாகவும் சரித்திர சாதனை புரிந்துள்ளனர். சங்கப் பாடல்களை எழுதிய பெண் புலவர்களின் எண்ணிக்கை 41 ஆகும். புறநானூற்றுப் பெண் புலவர்கள் 18. இப்பெண் புலவர்களின் பாடல்கள் மூலம் சங்க காலத்தில் வாழ்ந்த மறக்குடி மகளிரின் வீர மாண்புகளை ஆய்ந்து அவர்கள் இயல்புகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.